G7 Digital News Youtube

You missed

ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை கிராமம் நல்லிபாயையம் பகுதியில் நாச்சிமுத்து மகன் பழனிசாமி வயது (62)இவர் கருக்குப்பாளையம் செல்லும் பகுதியில் விவசாய தோட்டம் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார் இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் புதிய மோட்டார் பொருத்துவதற்கு அருகில் உள்ள நபர்கள் உதவியுடன் கயிறு கட்டி மோட்டார் இறக்கும் போது கால் தவறி சுமார் 120 ஆளம் உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார் தவறி விழும் போது பக்கவாற்று சுவற்றில் தலை மோதி படுகாயம் அடைந்து கிணற்றில் விழுந்து மூழ்கி விட்டார் அருகில் இருந்த நபர்கள் பவானி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவ மனைக்கு எடுத்து வந்து பணியில் இருந்த மருத்துவர் பரிசோதித்த போது வரும் வழியில் உயிர் இழந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார் இந்த சம்பவம் குறித்து பவானி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை மீட்டு சவகடங்கிற்க்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து பவானி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரித்து வருகிறார்கள்