நிகழ்ச்சிக்கு ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் ஆ ஜெகதீசன் , ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராஜ் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர்பவானி சட்டமன்ற உறுப்பினர் கே சி கருப்பணன் ஈரோடு வடக்கு மாவட்ட பாமக தலைவர் ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்
கர்நாடக அரசு மேகதாவில் 12, ஆயிரத்து 500 ஏக்கர் விவசாய விளை நிலங்களை அழித்து தற்போது அணைகட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கும் இதனால் 5 . 5 கோடி மக்களின் தனிநபர் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கும் என பேசிய அவர்
1892 மெட்ராஸ் பிரசிடென்சியாக தமிழ்நாடு இருந்த போது அப்போது இருந்த மைசூர் மகாராஜா தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் 75 விழுக்காடு கொடுப்பதாக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தம் 1924 இல் மீறப்பட்டு கர்நாடகாவில் கபணி, ஹேமாவதி, கிருஷ்ணராஜ சாகர் என மூன்று அணைகளை கட்டினார்கள் இதன் மூலம் மொத்தம் 170 டிஎம்சி தண்ணீர் அவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்
1934 ஆம் ஆண்டு மேட்டூரில் கட்டப்பட்ட மேட்டூர் டேம் மூலம் நமக்கு 80 டிஎம்சி தண்ணீர் மட்டுமே நமக்கு கிடைத்து வருகிறது இந்நிலையில் கர்நாடக அரசு காவிரியில் தடுப்பணை கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை
அடுத்து அமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடகா அரசு நடைமுறைப்படுத்தவில்லை
இந்நிலையில் இன்று கர்நாடக அரசின் முதல்வராக உள்ள டி கே சிவகுமார் மீண்டும் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 70 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவுள்ள புதிய அணையை கட்ட திட்டமிட்டு பணியினை துவக்கி உள்ளார்
அப்படி கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாகும் என கூறினார் நமது போராட்டத்திற்காக மத்தியிலாலும் பாரதிய ஜனதா அரசோ அல்லது காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் காரணம் கர்நாடகாவில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றனர் எனவே மத்திய அரசு கட்டாயம் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என்றார்
எனவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 99 9 சதவீத இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தது போல தற்போது தனி நபர்களின் வாழ்வாதார பிரச்சனைக்காக கட்டாயம் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்தார
நிகழ்ச்சியில் முன்னாள் சேலம் எம்எல்ஏ கார்த்தி,கிருஷ்ணமூர்த்தி ,வழக்கறிஞர் செங்கோட்டையன், மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம்,ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் திருமுருகன், டாஸ்மார்க் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சேகர், தொழிற்சங்க மாவட்ட மாவட்டத் தலைவர் கதிர்வேலு, பாட்டாளி டாஸ்மார்க் மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் குமார், பவானி நகர செயலாளர் தினேஷ் உள்பட ஆயிரக்கணக்கனோர் மற்றும் பாசன விவசாயிகள் சங்கத்தைச் சார்ந்தவர்களும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்